வீடு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கட்டும். ஆனால் இருக்கும் இடத்தை அழகாக வைத்துக் கொண்டால் அதுவே மாளிகை
பொதுவாக வீட்டுக்கு உள் அலங்காரம் செய்யும் போது அதற்கு லட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்று பலர் திகைக்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமில்லை. குறைந்த செலவில் அழகாக நம் வீட்டை மாற்றி அமைக்க முடியும்.
வீட்டை கட்டிவிட்டால் மட்டும் போதுமா வீட்டை அழகாக்க வேண்டாமா. சிறிய வீட்டைக்கூட நேர்த்தியான அலங்காரம் மூலம் அழகாகக் காட்டலாம்.
வீட்டு அலங்காரத்தில் எந்தெந்த விஷயங்களில் கவனம் தேவை என்பதைப் பார்ப்போம்.
பெரிய அலங்காரப் பொருட்கள் வாங்குவதைவிட வீட்டின் இடவசதிக்கு ஏற்ப எளிய அலங்காரப் பொருட்களைத் தேர்வு செய்வதே நல்லது.
பொருட்கள் வைக்கப்படும் இடத்தைப் பொறுத்தே அழகு வெளிப்படும். எனவே, எந்த இடத்தில் எந்தப் பொருளை வைக்கலாம் என்பதை யோசித்து வைக்கவும்.
எந்த வண்ணத்தைச் சுவருக்குப் பூசுவது என்பதில் கவனம் வேண்டும். வீட்டுக்குள் பூசப்படும் வண்ணம் நன்றாக இருந்தாலே வீட்டுக்கு ஓரளவு கலைநயம் வந்துவிடும். எந்த வண்ணத்தைச் சுவருக்குப் பூசுவது என்பதில் கவனம் வேண்டும்.
வெளிர் நிறங்களை அடிக்கலாம் பார்க்க பிரகாசமாகவும் எல்லாரும் விரும்பக்கூடியதாக இருக்கும். இடமும் விசாலமாக தெரியும்.அதே போல் படுக்கையறை என்பது நம் தனிப்பட்ட அறை என்பதால் விரும்பிய நிறங்களை அடிக்கலாம்.
நிறம் ஒன்று கொன்று தொடர்புடையதாவோ ஒத்த நிற குடும்பத்தை சேர்ந்ததாகவே இருந்தால் மிகவும் நன்றாக காட்ச்சியளிக்கும்
தரைக்கு பெரிய வெர்டிபைட் டைல்ஸ் போடுவது இப்போது வழக்கமாக உள்ளது. மார்பில் மற்றும் கிரானைட் கற்களை விட இவை பல டிசைன்களில் வருவதால் பெரும்பாலான மக்கள் இதை விரும்புகிறார்கள். விலையும் குறைவு. வெளிர் நிறங்கள் பார்க்க அழகாகவும் அதே சமயம் அறைகளை பெரிதாகவும் எடுத்துக்காட்டும்.
வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ஒரு கலை. மாதம் ஒரு முறை வீட்டை ஓட்டடை அடிக்க வேண்டும். வாரம ஒரு முறை வீட் டில் உள்ள டிவி அல மாரிகளை தூசி தட்ட வேண்டும்.
ஒரு நாள் விட்டு ஒருநாள் வீட்டை மாப் போட்டு துடைக்கலாம். இதை தவறாமல் கடை ப்பிடித்தால் நம் வீடும் மாளிகை போல் மின்னும்
சுவர்களில் தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்களை ஒட்டவைத்து அழகு சேர்க்கலாம். அழகான குஷன்களை வீட்டில் பயன்படுத்தலாம். இவை வீட்டுக்கு ஆடம்பர அந்தஸ்தைத் தரும். அறையின் சுவர் வண்ணங்களுக்கு ஏற்ப குஷன்களைத் தேர்வு இருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும்.
அலங்காரச் செடிகளை வீட்டுக்குள்ளும் வைத்து அலங்கரிக்கலாம். பூக்கள் மலரும் செடியாக இருந்தால் அறை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
அறையின் நிறம், அங்குள்ள பொருட்களுக்கு ஏற்ப ஜன்னல், கதவுகளில் தொங்கவிடப்படும் திரைச்சீலைகள் தரை விரிப்புகள் அமைந்தால் அவற்றின் அழகை எடுப்பாக காட்டும்.
Smart Interior is a professional architectural interior designing company and consultant for Exterior & Interior Designing We are well known for the innovative design ideas and unique, stylish, contemporary designs. Our works include designs for Residential, Retail, Commercial and Hospitality. We serve all kind of customers in designing the exteriors and interiors for residences, Modern Office and Modular Kitchen.
We create with a strong foundation to produce design solutions to our customers with expressive realistic renderings. The establishment is created to provide and grow talent to become a one stop situate to give the best Architectural Design and Rendering Services for the coming generations.
Among the surviving competitive and challenging industry, using our best realistic 3d visualizing techniques give us the uniqueness and opportunity to tie up with various concerns. The Moto of the firm is to satisfy each client with an extraordinary design using our best knowledge, skills and rendering techniques to provide society and humanity with Realistic 3d visualization.
Checkout our portfolio
We give you the best project forecasting in the industry.